ஆலமரம் தான் விரிந்து பரந்து நிற்பதில் பெருமை கொள்ளுமோ?
வாழையடி வாழை தனது வாரிசு வம்சாவிருத்தியில்
கீர்த்தி சொல்லுமோ..
தனித்து ஓங்கி உயர்ந்து நிற்கும்
ஒற்றைப் பனை இவைகளைப் பார்த்து என்ன நினைக்குமோ..
வருத்தப் படுமோ?
வாட்டமுறுமோ?
இல்லை.. இது என்
வாழ்வு என்று ஏற்றம் கொள்ளுமோ?…
– Ms. Valli Krishna
